புஸ்ஸி ஆனந்த் பயங்கரமான ஆள் ; விஜய் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக உள்ளது.. விஜயின் தந்தை SAC வருத்தம்..

By Deepika on ஏப்ரல் 1, 2024

Spread the love

தளபதி விஜய் தற்போது அரசியல் கட்சியையும் தொடங்கி விட்டார், தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ள இவரது கட்சியின் முக்கிய பொறுப்பில் கருப்பவர் தான் புஸ்ஸி ஆனந்த். தளபதிக்கே தளபதி என சொல்லப்படும் இவர் யார், இவர் ஏன் கடசியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் என பார்க்கலாம்.

Vijay and pussy anand

புதுசேரி மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் பிரமுகருமான மறைந்த அஷ்ரபின் உதவியாளர் தான் இந்த புஸ்ஸி ஆனந்த். இவர் முன்பிருந்தே தீவிர விஜய் ரசிகர். புதுசேரி மாநில வியாஜ்ஜிய ரசிகர் மன்ற தலைவர் ஆவார் இவர். 2006-ல் நடந்த தேர்தலில் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் புஸ்சி என்ற தொகுதியில் போட்டியிட்டு, எம்எல்ஏ ஆனார். அதனால்தான் இவர் புஸ்ஸி ஆனந்த என்று அழைக்கப்பட்டார்.

   
   

தொடர்ந்து விஜய்யின் மக்கள் மன்றத்திலும் நீடித்து வந்ததால், விஜய்க்கு நெருக்கமானவராக மாறினார். இதையடுத்து, அகில இந்திய விஜய் இயக்கத்தின் பொறுப்பாளர் பத்தாஹ்வி விஜய்யால் புஸ்ஸி ஆனந்திற்கு வழங்கப்பட்டது. இப்போது தமிழக வெற்றி கழகத்தில் இவர் முக்கிய பதவியில் இருக்கிறார். இந்த நிலையில் இந்த புஸ்ஸி ஆனந்த் பற்றி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

 

S A Chandrasekar about Pussy anand

அவர் கூறியுள்ளதாவது, புஸ்ஸி ஆனந்த் சாதாரணமான ஆள் இல்லை. இவனும் இன்னொருவனும் இருக்கிறார்கள், இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு சோசியல் மீடியா க்ரூப் வைத்து அதில் அட்மினாக இருக்கிறார்கள், அதில் விஜய்யும் உள்ளார். ஆபிசில் வெளியே பலகையில் படுத்து தூங்குவது போல் ஆள் வைத்து போட்டோ எடுத்து அதில் போடுவது, உடனே விஜய் பார்த்து விட்டு அண்ணா நீங்கள் என் அறையை எடுத்து கொள்ளுங்கள் என கூறினார். அந்தளவுக்கு விஜய்யை முட்டாளாக்கி வருகிறான். அரசியலவாதிகளை விட இந்த புஸ்ஸி ஆனந்த் மோசம். விஜய்யின் எதிர்காலத்தை நினைத்தால் எனக்கு பயமாக உள்ளது என கூறியுள்ளார்.