பிரபல நடிகரான ராகவா லாரன்ஸ் சமூக சேவை செய்வதில் மிகவும் அக்கறை கொண்டவர். சமீபத்தில் கூட கேபிவை பாலாவுடன் இணைந்து கணவரை இழந்த ஒரு பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுக்க உதவி செய்துள்ளார். எப்போதும் லாரன்ஸ் பிறருக்கு உதவ வேண்டும் என்பதையே தனது லட்சியமாக நினைப்பார்.

இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் ராகவா லாரன்ஸ் கூறியிருப்பதாவது, புதுக்கோட்டை சேர்ந்த சிவசக்தி என்பவருக்கு 4 வயது இருந்த போது அவர்கள் உதவி கேட்டு எங்களிடம் வந்தார். அவர்களது தந்தை குடும்பத்தை விட்டு சென்றுவிட்டார்.

சிவ சக்தியையும், அவரது சகோதரியையும் அவர்களது தாயை கவனித்துக் கொள்ள வேண்டிய நிலை இருந்தது. அவர்கள் இருவரும் என் வீட்டில் தான் வளர்ந்தார்கள். இப்போது சிவசக்தி கணிதத்தில் பிஎஸ்சி முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். காவல் உதவி ஆய்வாளராக வேண்டும் என்பதுதான் சிவ சக்தியின் கனவு.

என்னை போலவே பிறருக்கும் உதவி செய்ய சிவசக்தி விரும்புகிறார். கல்விதான் சக்தி வாய்ந்த ஆயுதம். வார்த்தைகளை விட செயல் வலிமை மிக்கது என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் ராகவா லாரன்ஸ் சமூக சேவைகளை பாராட்டி வருகின்றனர்.
Action speaks louder than words!
This is the story of Sivasakthi from Pudukottai. When he was just 4 years old, his mother came to us seeking help. His father had left the family, and his mother had to take care of him and his sister on her own. They both grew up in my home… pic.twitter.com/uU0uezm1NI
— Raghava Lawrence (@offl_Lawrence) March 31, 2024
