டேனியல் இறப்பிற்கு இது தான் காரணம்.. முரளி குடும்பத்துக்கே அந்த பிரச்சனை இருக்கு.. ; அதிர்ச்சி கொடுத்த பிரபல டாக்டர்..

By Deepika

Updated on:

வில்லன் நடிகராக அறியப்பட்ட டேனியல் பாலாஜி யாரும் எதிர்பாராத நேரத்தில் மரணமடைந்து விட்டார். வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதனாக வாழ்ந்திருப்பார் டேனியல் பாலாஜி, இன்றும் மக்கள் அனைவரும் அமுதன் என்றே அவரை அழைக்கின்றனர். காக்க காக்க படத்தினல் ஸ்ரீகாந்தாக மிரட்டி இருப்பார்.

Daniel balaji

பொல்லாதவன், அச்சம் என்பது மடமையடா, பைரவா, வடசென்னை, பிகில் போன்ற பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்த டேனியல் பாலாஜி மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் முரளியின் சகோதரர். சித்தி சீரியல் மூலம் சின்னத்திரையில் தொடங்கிய இவர் வெள்ளித்திரையில் மிரட்டலான வில்லனாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் படையை உருவாக்கினார்.

   
Dr Kantharaj about daniel balaji

வெறும் 48 வயதாகும் டேனியல் பாலாஜி, மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இதுகுறித்து டாக்டர் காந்தராஜ் கூறுகையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது, நண்பர்களுடன் சேர்ந்து ஹாஸ்பிடல் சென்று ஆன்ஜியோ செய்துள்ளார். ஆன்ஜியோ என்பது ஏதாவது பிளாக்ஸ் இருந்தால் அதை அகற்ற தானே தவிர, மாரடைப்பு வராமல் தடுப்பதற்கு அல்ல. அதேபோல், மனா அழுத்தமும், கவலையும் மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணங்கள்.

Daniel balaji died because of cardiac arrest

ஒரே படம் மூலம் புகழில் உச்சம் அடைந்த டேனியல் பாலாஜிக்கு அதற்கு அடுத்த பட வாய்ப்பே இல்லாமல் இருந்தார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். அதுமட்டுமல்ல அவரின் குடும்பமும் இதற்கு ஒரு காரணம். முரளியும் ஐம்பது வயதிற்கு முன்பாகவே இறந்துவிட்டார்,அதேபோல் தான் இவரின். சிலரின் குடும்பத்தில் இப்படி நடக்கும் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

author avatar
Deepika