போன மாசமே நடந்திருச்சு உங்ககிட்ட சொல்லாததுக்கு Sorry.. பிக்பாஸ் பாலாஜி வெளியிட்ட போட்டோஸ்.. ஷாக்கான ரசிகர்கள்..!!

By Priya Ram

Published on:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் சிலருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு எப்போதும் உண்டு. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு முறை கலந்து கொண்ட போட்டியாளர் பாலாஜி முருகதாஸ். இவருக்கு ஒரு சில படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகிறது.

   

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் போட்டியாளராக பங்கேற்றார். பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரன்னராக தேர்வு செய்யப்பட்டார். பிறகு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் பங்கேற்று டைட்டிலை வென்றார். இப்போது பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் ஒரு சில படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் திருமண கோலத்தில் தான் மணமேடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ஆனால் மணமேடையில் இருக்கும் மணப்பெண்ணின் முகம் தெரியாதபடி புகைப்படம் உள்ளது. மேலும் இது போன மாதமே நடந்திருச்சு. உங்களிடம் கூறாமல் இருந்ததற்கு sorry என பதிவிட்டுள்ளார்.

sd

அதனை பார்த்த ரசிகர்கள் பாலாஜி முருகதாஸுக்கு திருமணம் முடிந்து விட்டதா என கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும் இது ஏப்ரல் ஒன்றாம் தேதி என்பதால் ஏமாற்றுவதற்காக இப்படி புகைப்படங்களை பதிவிட்டு ஏமாற்றுகிறாரா? அல்லது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படமாக அது என ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து பாலாஜி முருகதாஸ் வேறு எதுவும் கூறவில்லை.

author avatar
Priya Ram