Connect with us

CINEMA

கன்னடத்துப் பைங்கிளி சரோஜா தேவியின் மழலைத் தமிழை பாடலிலேயே கிண்டல் செய்த கவிஞர்… என்ன பாட்டு தெரியுமா?

தமிழ் சினிமாவில் கொஞ்சும் தமிழ் பேசி ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி. கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவரை தமிழ் ரசிகர்கள் கன்னடத்துப் பைங்கிளி என்று சொல்லி அழைத்து கொண்டாடினர். இவர் தமிழில் 1957ஆம் ஆண்டு வெளியான தங்கமலை ரகசியம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

அவர் நடித்த படங்கள் ஹிட்டடித்த நிலையில் முன்னணி நடிகையானார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி, முத்துராமன் என பல முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை சரோஜா தேவி. தமிழில் மட்டுமே 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

   

இவர் கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த ஆதவன் படத்தில் நடித்திருந்தார். வயது முதிர்வு காரணமாக இப்போது அவர் எந்த படத்திலும் நடிப்பதில்லை. சரோஜா தேவி எத்தனையோ தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும் கடைசி வரை அவரின் மழலை தமிழ் மாறவே இல்லை. ஆதவன் படத்தில் கூட அவரின் மொழி மாறாமல் அப்படியே இருந்தது.

இந்நிலையில் அவரின் இந்த மழலைத் தமிழை கவிஞர் கண்ணதாசன் ஒரு படத்தில் இடம்பெற்ற பாடலின் மூலமே கிண்டல் செய்துள்ளார். 1961-ம் ஆண்டு வெளியான பனித்திரை படத்தில்தான் தன் குறும்பு வரிகளை எழுதியிருந்தார் கவிஞர். இந்த படத்தை முக்தா சீனிவாசன் இயக்கியிருந்த நிலையில், ஜெமினி கணேசன் நாயகனாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் வரும், ‘’ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே’’ என்ற பாடல் மிகவும பிரபலமான பாடல். இந்த பாடலில்  இடம்பெறும் ஒரு வரியில் ‘’மழலை போல பேசி பேசி மயங்க வைத்தாயே நான் மயங்கியபோது குறும்பு பேசி சிரிக்க வைத்தாயே’’ என்ற வரிகளை எழுதியிருப்பார். இந்த வரிகள் சரியாக தமிழில் பேச தெரியாத சரோஜா தேவியை கிண்டல் செய்வது பொல் அமைந்திருக்கும். பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடிய இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top