தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் இன்று (டிச.9) நடைபெற்று வருகிறது. இதில் பேசிய விஜய், புதுச்சேரி மக்கள் திமுகவை நம்ப வேண்டாம், அவர்கள் நம்ப வைத்து ஏமாற்றி விடுவார்கள் என்றும், தமிழ்நாடு தனி புதுச்சேரி தனி என்பார்கள் நமக்கு அப்படி கிடையாது. நாம் வேறு வேறு கிடையாது புதுச்சேரி அரசு திமுகவைப் போலல்லாமல்.
வேறு கட்சி கூட்டம் நடத்தினாலும், மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்கிறது. திமுக அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் என்று நம்புகிறேன். இல்லையென்றால், வரவிருக்கும் தேர்தல்களில் அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
