BREAKING: 2026 தேர்தல் கூட்டணி… சற்றுமுன் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 9, 2025

Spread the love

தமிழகத்தில் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக விஜய் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளாமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 75 நாட்களுக்குப் பிறகு விஜய் இன்று புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தில் பேசி வருகின்றார். புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற விஜய் மக்கள் மத்தியில் உரையாற்றி வருகின்றார்.

அதன்படி மாற்று கட்சி கூட்டத்திற்கு எப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் பாடம் கற்க வேண்டும் என விஜய் கூறியுள்ளார். தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என விஜய் அறிவித்துள்ளார். புதுச்சேரியிலும் ஆளும் என் ஆர் காங்கிரசுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைக்க உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. அதற்கு அச்சாரமாக கூட்டத்தில் பலரும் ரங்கசாமி மற்றும் விஜய் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை வைத்திருந்தனர். தற்போது விஜய்யும் இவ்வாறு பேசியுள்ளது கிட்டத்தட்ட கூட்டணியை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது.