வாக்கிங் போகும்போது மாயமான 79 வயது பாட்டி… ஒரே ஒரு க்ளிக்கில் கண்டுபிடித்த பேரன்… பலரையும் நெகிழ வைத்த சம்பவம்…!

By Nanthini on மார்கழி 9, 2025

Spread the love

தெற்கு மும்பையில் மாலை நடை பயிற்சி மேற்கொண்டபோது 79 வயது மூதாட்டி சாயரா பீ தாஜுதீன் முல்லா என்பவர் திடீரென மாயமானார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் பதற்றம் அடைந்தனர். ஆனால் அவருடைய பேரன் முகமது வசீம் சாமர்த்தியதால் மூதாட்டி விபத்தில் சிக்கியது உடனடியாக தெரிய வந்தது. அதாவது பேரன் வசீம் தனது பாட்டியின் கழுத்து சங்கிலியில் ரகசியமாக பொருத்தி இருந்த ஜிபிஎஸ் ட்ராக்கர் கருவியை உடனடியாக செயல்படுத்தினார். அந்த ஜிபிஎஸ் கருவி அவருடைய பாட்டியின் இருப்பிடத்தை பரேலில் உள்ள KEM மருத்துவமனையை காட்டியுள்ளது.

அருகே உள்ள பகுதியில் இருசக்கர வாகன மோதியதால் காயமடைந்த மூதாட்டி அங்கிருந்தவர்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தலையில் காயமடைந்திருந்த மூதாட்டி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நன்றாக உள்ளதாக தெரிகிறது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சரியான நேரத்தில் செயல்பட்டதால் மூதாட்டியின் உயிர் காப்பாற்றப்பட்டது. அந்த சிறுவனின் சாமர்த்தியத்தை பார்த்த பலரும் அவரை பாராட்டிய வண்ணம் உள்ளனர்.