BREAKING: இன்னும் சற்று நேரத்தில் விஜய் முக்கிய முடிவு… இன்றே விரைகிறார்…!

By Nanthini on ஐப்பசி 3, 2025

Spread the love

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக அரசு தனிநபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ள நிலையில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் விவரங்கள் விஜய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கரூர் செல்ல பாதுகாப்பு அளிக்க கோரிய வழக்கு இன்னும் சற்று நேரத்தில் ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வர உள்ளது. இதில் கரூர் செல்லலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டால் இன்றே பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து முடிவெடுக்க சற்று நேரத்தில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார்.