ஒவ்வொரு வருடமும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீதம் இடத்தை ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கட்டணத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான RTE கட்டணத்தை விடுவிக்காமல் இருந்தது. இதன் காரணமாக நடப்பு கல்வி ஆண்டில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறாமல் இருந்தது.
இப்படியான நிலையில் தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து RTE திட்டத்தின் கீழ் வருகின்ற அக்டோப 6 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் தங்களுடைய குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அல்லது LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை தங்கள் குழந்தைகளை இந்த திட்டத்தில் சேர்க்கலாம்.
ஏற்கனவே பள்ளியில் படித்து வருபவர்களும் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே கல்வி கட்டணத்தை பள்ளியில் செலுத்தி இருந்தால் உங்களுடைய விண்ணப்பம் ஏற்கப்படும் பட்சத்தில் அதிலிருந்து ஏழு நாட்களில் நீங்கள் செலுத்திய கட்டிடத்தை திரும்ப பெறலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
