சென்னையில் உள்ள திரிஷா வீட்டிற்கு இன்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் இல்லம் மற்றும் கவர்னர் மாளிகைக்கும் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து. இதனைத் தொடர்ந்து மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் நடத்திய சோதனையில் இது புரளி என தெரிய வந்துள்ளது.
இருந்தாலும் சென்னை ஆழ்வார்பேட்டை, கோட்டூர்புரத்தில் இருக்கும் முதல்வர் வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செல்போன் எண்ணை வைத்து மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீஸ் ஆர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
