பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் காலமானார். சென்னையில் நேற்று முன்தினம் படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார் . இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் ரோபோ சங்கரின் இறப்பு செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது X பக்கத்தில், “தனது நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனி இடத்தை உருவாக்கிய சிறந்த பண்பாளரை இழந்துவாடும் குடும்பத்தினர், ரசிகர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…