தமிழக முதலமைச்சர் விஜய், ஜூன் 22 அன்று வரவிருக்கும் தனது 52-வது பிறந்தநாளைத் தனது சொந்தத் தொகுதியான பெரம்பூர் தொகுதி மக்களுடன் இணைந்து கொண்டாட முடிவு செய்துள்ளார். இந்தத் தகவல் தற்பொழுது தவெக தொண்டர்கள் மற்றும் தொகுதி மக்கள் மத்தியில் பெரிய இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அன்றைய தினம் தொகுதி மக்களுக்குப் பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிகளையும், நலவாரியப் பொருட்களையும் அவர் நேரடியாக வழங்கத் திட்டமிட்டுள்ளார்.
மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்க விரும்பும் முதல்வர் விஜய், மாதம் ஒருமுறை தனது தொகுதி மக்களைச் சந்தித்து அவர்களிடம் இருந்து நேரடியாகக் கோரிக்கை மனுக்களைப் பெறவும் முடிவெடுத்துள்ளார். அவ்வாறு பெறப்படும் பொதுமக்களின் மனுக்கள் மீது மிக விரைவாகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து தீர்வு காணவும் அவர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சரின் இந்த அதிரடி மக்கள் நல அறிவிப்புகள் பெரம்பூர் தொகுதி மக்கள் மற்றும் தவெக கட்சியினர் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த விசிக பேனரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியினர்…
கிழக்கு டெல்லியின் கல்யாண்புரி பகுதியில் டெல்லி மாநகராட்சியில் (MCD) தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்த அனில் (27) என்ற வாலிபர்…
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் இக்பால், தண்ணீரை விட்டு வெளியே வந்தால் உடலில்…
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் மகாந்தேஷ் நகர் பிரதான சாலையில், லவ் டேல் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்த…
மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை மாளவிகா சர்மா, தான் அறிமுகமாகும் 'கலிஃபா' என்ற மலையாளப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காகச் சமீபத்தில்…
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சிகாரா பகுதியில் அமைந்துள்ள சஞ்சய் சிட்டி மாடல் பள்ளியில் பெண் ஒருவர் கொடூரமாக…