தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் NDA கூட்டணியில் இருந்து விலகுவதாக நேற்று டிடிவி தினகரன் திடீரென அறிவித்தார். இது தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் விஜயகாந்த் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தினாரோ அதனைப் போல 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி தாக்கத்தை ஏற்படுத்தும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது TVK கூட்டணிக்கு டிடிவி தினகரன் செல்ல உள்ளதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றன. ஏற்கனவே ஓபிஎஸ்-ம் விலகிய நிலையில் செங்கோட்டையனின் நிலைப்பாட்டை பொருத்தும் கூட்டணி கணக்கு மாறும் என்கிறது அரசியல் வட்டாரம்.
