ஆத்தூரில் உள்ள ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வழங்கப் போவதாக தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டுள்ளது. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு உற்பத்தி அதிகமாக உள்ளதால் ஜவ்வரிசி விலை குறைந்த வருகிறது. அதனால் ஜவ்வரிசி விற்பனையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை மேற்கொண்டு உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரேசன் கடைகளில் ஜவ்வரிசி போட உள்ளதாக தகவல் வந்துள்ளது.
ஐக்கிய விவசாயி சங்க மாநில தலைவர் சங்கரய்யா பேசியுள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த புத்தகத் திருவிழாவில் 60க்கும் மேற்பட்ட ஜவ்வரிசி உணவை தயாரித்து வழங்கப்பட்டன. பொதுமக்களும் சிறுவர்களும் நல்ல வரவேற்பை கொடுத்தனர். ஜவ்வரிசியை ஊக்குவிக்கும் வகையில் ரேஷன் கடையில் ஜவ்வரிசி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுபட்டு வந்தது.
சேலம் சேகோ சர்வ் செயலாற்றிய கீர்த்தி பிரியதர்ஷினி கடந்த ஆகஸ்டில் தொழில்துறை வணிக இயக்குனருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் உணவில் ஜவ்வரிசி கண்டிப்பாக சேர்க்க வேண்டும். அதனால் நேரடி விற்பனை மையங்கள், ஆவின் விற்பனை மையங்கள் ஜவ்வரிசி விற்பனையை செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார். ரேஷன் கடைகளிலும் ஜவ்வரிசி வழங்க வேண்டும் இது போன்ற மாற்றத்தை கொண்டு வந்தாலே ஜவ்வரிசி விற்பனை அதிகரிக்கும் என்று கூறியிருந்தார்.
