இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்துக்கள் எந்த நேரத்தில் எப்போது நடக்கிறது என்பதை சொல்ல முடியவில்லை. சாதாரணமாக நடந்து சென்று கொண்டிருக்கக் கூடிய ஒரு மனிதன் மீது கூட அசால்ட் ஆக ஒரு வாகனம் மோதிவிட்டு செல்கிறது. மனிதனின் உயிர் எந்த நிமிடம் பிரியும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. பெரும்பாலான சாலை விபத்துக்கள் அலட்சியத்தால் தான் நடைபெறுகின்றன. இப்படி நடைபெறக்கூடிய பெரிய விபத்துகளில் நூலிலையில் உயிர் தப்பியவர்களும் அதிகம். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. அதாவது இணையத்தில் தற்போது வைரலாகி கொண்டு இருக்கும் ஒரு சிசிடிவி காட்சியில், பெண் ஒருவர் சாதாரணமாக சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார்.
அப்போது மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று நூலிழையில் அந்த பெண்ணை உரசி அவர் மேலே அணிந்திருந்த துப்பட்டாவை தூக்கி விபத்துக்குள்ளானது. நொடி பொழுதில் அந்தப் பெண் உயிர் தப்பினார். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த சம்பவம் நடந்துள்ளது. அது தொடர்பான காட்சியை அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் மின்னல் வேகத்தில் வைரலாகி வருகிறது.
