இரவோடு இரவாக இபிஎஸ்-க்கு வந்த அதிர்ச்சி… கோட்டையில் கை வைக்கும் செங்கோட்டையன்… அதிரடியாக களமிறங்கும் விஜய்… பரபரப்பில் அரசியல் களம்…!

By Nanthini on மார்கழி 20, 2025

Spread the love

2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி வியூகங்கள் மற்றும் தொகுதி பங்கீடு என தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. மற்ற கட்சிகளை விட அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் ஈபிஎஸ் தீவிரமாக செயல்பட்டு வருகின்றார். அதற்காக தேசிய கட்சியான பாஜக உடன் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அதிமுக கூட்டணி அமைத்து அதனுடன் சேர்ந்து மூன்றாம் நிலை கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் பல்வேறு பிரிவுகள் ஏற்பட்டு கட்சி சிதறுண்டு கிடைக்கின்றது.

இபிஎஸ் அதிமுகவின் பொறுப்பை ஏற்ற உடன் கட்சியிலிருந்து முக்கிய முகங்கள் பலரையும் நீக்கினார். முதலில் ஓபிஎஸ், சசிகலா மற்றும் தினகரனை நீக்கிய இபிஎஸ் இறுதியில் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையனையும் கட்சியிலிருந்து தூக்கி வீசி விட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்த செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து இன்னும் சில அமைச்சர்கள் விஜய் கட்சியில் இணைய உள்ளார் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். அதற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று முன்தினம்  ஈரோட்டில் நடந்த பிரச்சாரத்தில் கூட விஜய் இதனை உறுதிப்படுத்தி இருந்தார்.

   

இந்நிலையில் அடுத்தடுத்த கொங்கு மண்டலத்தில் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் திட்டமிட்டு வருகிறார். அதன்படி டிசம்பர் 30-ஆம் தேதி சேலத்தில் விஜய் பரப்புரை மேற்கொள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஈரோட்டில் பரப்புரை செய்து கொங்கு பகுதியில் விஜய்க்கான ஆதரவை காண்பித்தார் செங்கோட்டையன். இதனைத் தொடர்ந்து இபிஎஸ் இன் சொந்த மாவட்டமான சேலத்தில் விஜயை களம் இறக்கி அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுக்க செங்கோட்டையன் தயாராகி வருகிறார்.