“ஐயப்பனுக்கு மாலை போட்டு இருக்கியா, அப்போ கழுத்துல தூண்டு இருக்கக்கூடாது”… ஆளுநருக்காக கல்லூரி நிர்வாகம் செய்த அதிர்ச்சி செயல்… தமிழகத்தில் பரபரப்பு…!

By Nanthini on மார்கழி 20, 2025

Spread the love

ஐயப்பனின் கருப்பு துண்டை பிடுங்கிய கல்லூரி நிர்வாகத்தின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கொங்குநாடு கல்லூரிக்கு ஆளுநர் ரவி வருகை தர உள்ளார். இதனால் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருந்தவர்களின் கருப்பு துண்டுகளை பிடுங்கி கொண்டு தான் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேட்டால் ஆளுநருக்கு கருப்பு துண்டு பிடிக்காது, கருப்பு என்றால் பிடிக்காது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருப்பு துண்டுகளை கல்லூரி நிர்வாகம் பிடுங்கி வைத்துள்ளது. இதனை கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின.

அதில் ஒரு பிரிவினரை கோவை சிவானந்தா காலனியில் உள்ள லயன்ஸ் கிளப் மண்டபத்தில் போலீசார் அடைத்து வைத்துள்ளனர். சிந்து சமவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்று மாற்று பெயரிட்டு வரலாற்றை தெரிந்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் கருத்தரங்கில் தமிழ்நாடு ஆளுநர் ரவி பங்கேர்கிறார். இதனை எதிர்த்து கோவை டாடாபாத் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு இயக்கங்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பு கிளப்பியுள்ளது.