பாஜக-வுக்கு அடித்த லாட்டரி…. விஜய் எடுத்த அந்த ஒரு முடிவால் மொத்தமாக மாறப்போகும் தேர்தல் களம்… அமித்ஷா போடும் மாஸ்டர் பிளான்….!

By Nanthini on புரட்டாதி 2, 2026

Spread the love

தமிழ்நாட்டின் அரசியல் தளத்தில் முன்னணி நட்சத்திரமாக இருந்து மக்கள் பிரதிநிதியாக மாறியுள்ள விஜய்யை, தமிழக வெற்றிக் கழகத்தினர் அடுத்த இந்தியப் பிரதமராக முன்நிறுத்தி வரும் விவாதம் தேசிய அளவில் புயலைக் கிளப்பியுள்ளது. சட்டசபையில் நடந்த தொகுதி மறுவரையறை விவாதத்தின் போது, தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விதை போட்ட நிலையில், கில்லி சரத்குமார், ஜெகதீஸ்வரி உள்ளிட்ட தவெக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் “அடுத்த பிரதமர் விஜய்” என்ற கோஷத்தை கையில் எடுத்தனர். இதற்கு வலுசேர்க்கும் வகையில் இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பில், பிரதமர் வேட்பாளருக்கான ரேஸில் விஜய் 9% ஆதரவுடன் 3-ஆம் இடம் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்கள் உட்பட வட இந்தியாவிலும் விஜய்யின் உரைகள் பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு, இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சர்கள் மூலமாக ரீல்ஸ்களாகப் பரப்பப்பட்டு பெரும் பிரசாரமே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்தத் திடீர் நகர்வுகள், தவெக ஆட்சி அமைக்க உறுதுணையாக இருந்த காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. தவெக கூட்டணி சார்பில் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்ற விழாவில் ராகுல் காந்தியே நேரில் பங்கேற்றதுடன், வரும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் கூட்டணி தொடரும் என காங்கிரஸ் அறிவித்திருந்தது. விஜய்யின் செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் அறுவடை செய்யலாம் என்றும், ஆந்திராவில் விஜய்க்கு ஜெகன் மோகன் ரெட்டியுடன் இருக்கும் நட்பைப் பயன்படுத்தி பலன் பெறலாம் என்றும் காங்கிரஸ் கணக்கு போட்டிருந்தது. ஆனால், விஜய் தரப்போ “2029-இல் விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைப்பதே ராகுல் காந்தி தான்” என்ற ரீதியில் பிரசாரத்தைத் திருப்பி விட்டு காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

   

தவெகவின் இந்தத் தனித்துவமான பிரதமர் வேட்பாளர் ரேஸ், மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கத் துடிக்கும் பாஜகவை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. வடமாநிலங்களில் இளைஞர்களின் எழுச்சியால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படும் சூழல் உள்ளதால், அதைச் ஈடுகட்ட தென்னிந்திய மாநிலங்களை அக்கட்சி பெரிதும் நம்பியுள்ளது. தற்போதைய சூழலில் ஆந்திரா தவிர்த்து பெரும்பாலான தென்னக மாநிலங்களில் காங்கிரஸோ அல்லது அதன் கூட்டணிக் கட்சியோ ஆட்சியில் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் தவெக தனித்து களமிறங்கி மும்முனைப் போட்டியை உருவாக்கினால், அது நேரடியாக அதிமுக – பாஜக கூட்டணிக்கு சாதகமான வாக்குகளாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

   

மேலும், கேரளா மற்றும் தெலங்கானா அரசியலிலும் தவெக தடம்பதிக்க ஆயத்தமாகி வருவது அரசியல் களத்தை சூடேற்றியுள்ளது. ஹைதராபாத் சென்ற போது சந்திரசேகர் ராவைச் சந்தித்தது முதல், கேரளாவில் தமக்கிருக்கும் பிரம்மாண்ட ரசிகர் பட்டாளத்தை அரசியல் பலமாக மாற்ற விஜய்யின் கட்சி மேற்கொள்ளும் முயற்சிகள் வரை தென்னிந்தியாவில் ஒரு பெரிய வாக்கு பிளவை ஏற்படுத்தும். கேரளா போன்ற மாநிலங்களில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் விஜய் பக்கம் சாய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டாலும், இறுதியில் ஏற்படப் போகும் இந்த மும்முனைப் போட்டி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியைப் பலவீனப்படுத்தி, பாஜக தொடர்ந்து 4-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கவே வழிவகுக்கும் என அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.