தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்கால உதவித்தொகை ரூ.8,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் தினசரி நிவாரணத் தொகை ரூ.350-ல் இருந்து ரூ.600 ஆக உயர்த்தப்படுவதாகவும் தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது.
பேரவையில் உரையாற்றிய அமைச்சர் ஸ்ரீநாத், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தபடி இந்த உதவித்தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இக்கட்டான காலங்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், அவர்களின் குடும்பப் பொருளாதாரப் பின்னடைவைச் சீர்செய்யவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த கணிசமானத் தொகை உயர்வு, ஒட்டுமொத்த மீனவச் சமுதாயத்தினரிடையே பெருமகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.
