தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு பக்கம் தேர்தல் பிரச்சாரம் மறுபக்கம் கூட்டணி பேச்சு வார்த்தை என மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. அதேசமயம் அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.
இதனிடையே சமீபத்தில் கரூர் விவகாரத்தில் சிக்கிய விஜய்க்கு ஆதரவாக அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் செயல்பட்டன. சமீபத்தில் கரூர் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூர் சம்பவத்துக்கு பிறகு பெரிதாக வெளியே வாராமல் இருந்த விஜய், முதல்முறையாக பனையூரில் உள்ள அலுவலகத்துக்கு சென்றுள்ளார். நேற்று ஜாமினில் வெளிவந்த தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் அப்போது, விரைவில் தான் கரூர் வருவதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு விஜய் அவர்களிடம் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது
