குடும்பத் தலைவிகளே உடனே கிளம்புங்க… மகளிர் உரிமைத்தொகை… சற்றுமுன் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 16, 2025

Spread the love

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்து வந்த நிலையில் தகுதி உள்ள பெண்களுக்கு கிடைக்காததால் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு பலரும் விண்ணப்பித்து வருகிறார்கள்.

இந்நிலையில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். தற்போது வரை 28 லட்சம் பெயர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களது மனுக்கள் மீதான கள ஆய்வு பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. மேலும் நவம்பர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. அனைத்து பணிகளும் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிந்து டிசம்பர் மாதத்தில் புதிய பயனர்களுக்கு பணம் டெபாசிட் செய்யப்பட உள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.