“அம்மா பட்டம் பறக்குது”… மேலே பறந்த பட்டத்தை பிடிக்க முயன்ற 3 வயது குழந்தை… நொடி பொழுதில் நடந்த துயர சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 16, 2025

Spread the love

உத்திர பிரதேசம் மாநிலம் லக்னோவின் அஜீஸ் நகர் பகுதியில் வசித்து வரும் நாசித் அலி என்பவருடைய மகன் அனீஸ் (3). இந்த சிறுவன் நேற்று மதியம் அவர்கள் வசித்து வரும் மூன்று மாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மேலே ஒரு பட்டம் பறந்து கொண்டிருந்த நிலையில் அதனை பிடிக்க சிறுவன் முயற்சி செய்துள்ளான். தொடர்ந்து மாடியில் கைப்பிடி சுவரில் ஏறி சிறுவன் அந்த பட்டத்தை பிடிக்க முயற்சித்த போது கால் தவறி மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளான்.

உடனே சத்தம் கேட்டு ஓடி வந்து அக்கம் பக்கத்தினர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கடந்த சிறுவனை மீட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அந்த சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டத்தை பிடிக்க முயன்ற மூன்று வயது சிறுவன் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது