Connect with us

வெற்றிமாறன், அமீரிடமே வேலையைக் காட்டிய பிரபல நடிகர்… கடுப்பாகி படத்தையே கைவிட்ட சம்பவம்!

vetrimaaran and ameer

CINEMA

வெற்றிமாறன், அமீரிடமே வேலையைக் காட்டிய பிரபல நடிகர்… கடுப்பாகி படத்தையே கைவிட்ட சம்பவம்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக இருக்கிறார்கள் இயக்குனர்கள் வெற்றிமாறனும், அமீரும். அமீர் தான் இயக்கிய பருத்திவீரன் என்ற ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். அதன் பின்னர் அவர் யோகி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அதன் பின்னர் அவர் இயக்கிய ஆதிபகவன் திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. அதனால் அவர் நீண்ட ஆண்டுகளாக எந்த படமுமே இயக்கவில்லை. இடையில் அவர் இயக்கிய சந்தனத்தேவன் மற்றும் இறைவன் மிகப் பெரியவன் ஆகிய திரைப்படங்கள் இன்னும் முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கின்றன.

இடையில் அவர் வடசென்னை திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய நடிகராகிவிட்டார். இப்போது வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர் வெற்றிமாறனோடு வடசென்னை படத்துக்குப் பிறகு மிகவும் நெருங்கிய நண்பராக பயணித்து வருகிறார்.

   

இதற்கிடையில் வெற்றிமாறன் தயாரிப்பில் அமீர் இயக்கத்தில் ஒரு படத்தை இயக்க முயற்சிகள் நடந்தனர். அந்த படத்தின் கதையை இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஒரு பிரபல நடிகரிடம் சொல்லியுள்ளனர். அவர் கதையைக் கேட்டுவிட்டு இந்த படத்தில் நான் நடிக்கிறேன். ஆனால் நான்தான் படத்தொகுப்பு செய்வேன் என்று கூறி ஷாக் கொடுத்தாராம். இதைக் கேட்டுக் கடுப்பான வெற்றிமாறன் ‘அந்த படமே வேணாம்’ எனக் கூறிவிட்டாராம்.

 

இதை அமீர் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அந்த பிரபல நடிகர் படத்தொகுப்பு துறையில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரை தன்னோடு வைத்துகொண்டு அவர் எடிட் செய்வதில் சில கரெக்‌ஷன்களை மட்டும் சொலிவிட்டு எடிட்டிங்கில் தன்னுடைய பெயரை போட்டுக்கொண்டு அலப்பறை செய்வதாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளன. ஆனாலும் அந்த நடிகர் பிடிவாதகமான நான்தான் எடிட் செய்வேன் என அலப்பறை செய்து வருகிறாராம்.

Continue Reading
To Top