அடுத்த படத்திற்கு பிரபல நடிகருடன் இணையும் வெற்றிமாறன்.. ‘அதிகாரம்’ என்ற தலைப்புடன் போட்ட பிள்ளயார்ச்சுழி..

By Mahalakshmi on ஏப்ரல் 21, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தனது நடனத் திறமையால் மக்களை கவர்ந்தவர் ராகவா லாரன்ஸ். 2002 ஆம் ஆண்டு வெளியான பார்த்தாலே பரவசம் என்ற திரைப்படத்தில் மூலமாக சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கு முன்பாக பல திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி இருக்கின்றார். சினிமாவை தாண்டி பல நல்ல விஷயங்களை செய்து வருகின்றார் ராகவா லாரன்ஸ்.

   

ஊனமுற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகள் என பலருக்கும் பல உதவிகளை செய்து வருகிறார். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சென்ற ஆண்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். லாரன்ஸ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யாவும் இப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

   

 

தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். அடுத்ததாக ராகவா லாரன்ஸ் ஹண்டர் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்தை வெங்கட் மோகன் இயக்க இருக்கிறார். தற்போது புதிதாக ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதாவது அறிமுகம் இயக்குனரான துரை செந்தில்குமார் இயக்கத்தில் அதிகாரம் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் கதையை வெற்றிமாறன் எழுதியுள்ளார். இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் மற்றும் கதிரேசன் என்பவர் சேர்ந்து தயாரிக்க இருக்கிறார்கள். இது தொடர்பான அறிவிப்பை ராகவா லாரன்ஸ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.