தயாரிப்பாளர் சொன்ன பலே ஐடியாவுக்கு ‘நோ’ சொன்ன விஜய் ஆண்டனி? இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான ஆளா இவரு?

By Arun on சித்திரை 21, 2024

Spread the love

தமிழ் சினிமா இசை ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்த இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் விஜய் ஆண்டனி, சமீப காலமாக பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் அவரது நடிப்பில் உருவான “ரோமியோ” திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனமே வெளிவந்தது. எனினும் இணையத்தில் பல விமர்சகர்கள் இத்திரைப்படத்தை மிகவும் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதில் குறிப்பாக புளு சட்டை மாறன் மிகவும் காத்திரமாக இத்திரைப்படத்தை விமர்சித்திருந்தார்.

   

   

அதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி விமர்சகர்களின் விமர்சனங்களையும் முக்கியமாக புளு சட்டை மாறனின் விமர்சனத்தையும் குறித்து பதிலடி தருவது போல் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அதற்கு பதில் சொல்லும் விதமாக புளு சட்டை மாறனும் தனது கருத்தை தெரிவிக்க, சமூக வலைத்தளமே பரபரப்பானது.

 

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான தனஞ்சயன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “விஜய் ஆண்டனி ரோமியோவுக்கு அடுத்தபடியாக ஒரு புதிய திரைப்படத்தை தயாரித்து நடிக்கவுள்ளார். அத்திரைப்படத்தின் கதையை 3 பேர் கொண்ட குழுவை வைத்து டிஸ்கஸ் செய்தபிறகு அந்த ஸ்கிரிப்ட்டை முடிவு செய்யலாமே என்று அவருக்கு ஒரு ஆலோசனையை கூறினேன்.

அதற்கு அவர், ‘இல்லை, என்னால் முடியாது. அப்படி செய்தால் என் மேல் உள்ள நம்பிக்கை குறைந்துவிடும்’ என விஜய் ஆண்டனி பதிளித்தார்” என்று இருவரும் பேசிக்கொண்டது குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். தயாரிப்பாளர் தனஞ்சயன், விஜய் ஆண்டனியுடன் இணைந்து அவரது திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.