Connect with us

CINEMA

அட்ரா சக்க… ‘சூர்யா 44’ திரைப்படத்தின் இசையமைப்பாளார் இவர்தானா…?  அப்படின்னா பாட்டு சும்மா தாறுமாறா இருக்க போகுதே…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா.  தனது திறமையால் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

   

இதைத்தொடர்ந்து தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். மேலும்  இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படம் ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்கு பிறகு புறநானூறு படத்தில் நடிக்கிறார். மேலும்வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். ஆனால் அதிலிருந்து விலகிவிட்டதாக புதிய தகவல்களும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கங்குவா படத்தை முடித்த கையோடு தற்பொழுது ‘சூர்யா 44’ திரைப்படத்தின் படப்பிடிப்பு  தற்பொழுது தொடங்க உள்ளதாம்.

இத்திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார்.  இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கமிட் ஆகி உள்ளாராம். கார்த்திக்  சுப்புராஜ் சந்தோஷ் நாராயணன் என இவர்களுடன் நடிகர் சூர்யா கூட்டணி வைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in CINEMA

To Top