இயக்குனர் ஹரியின் வாழ்க்கை வரலாற்று படம்? வேற லெவல் டைட்டில் வைத்த சம்பவம்?

By Arun on சித்திரை 21, 2024

Spread the love

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. அவரது முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் விக்ரமை வைத்து அவர் இயக்கிய “சாமி” திரைப்படம் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.

அதனை தொடர்ந்து “ஆறு”, “தாமிரபரணி”, “வேல்”, “சிங்கம்” என அதிரிபுதிரியான பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தார் ஹரி. இவரது திரைப்படங்களில் திரைக்கதை விறுவிறுவென செல்லும். இது இவரது தனித்துவமான பாணியாக ஆகிப்போனது. அதே போல் இவரது திரைப்படங்களில் வசனங்கள் அனைத்தும் அனல் பறக்கும்.

   

   

இந்த நிலையில் ஹரி தற்போது விஷாலை வைத்து “ரத்னம்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் ஹரியிடம் நிருபர், “உங்களது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் என்ன டைட்டில் வைப்பீர்கள்” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஹரி, “அருவா” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

ஹரி திரைப்படங்கள் முழுக்க முழுக்க ஆக்சன் கலந்த சென்டிமன்ட் திரைப்படங்களாகவே இருக்கும். குறிப்பாக அருவா, வேல்கம்பு போன்ற ஆயுதங்கள் இவரது திரைப்படங்களில் பெரும்பாலும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.