தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதுவரை இரண்டு கட்டங்களாக தேர்தல் பிரச்சாரம் நடந்து முடிந்துள்ள நிலையில் மூன்றாவது கட்டமாக இன்று நாமக்கல் மற்றும் கரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது நாமக்கல்லில் தேர்தல் பரப்புரையாற்றி வரும் விஜய், பாசிச பாஜகவுடன் பொருந்தாத கூட்டணி அமைத்துள்ள அதிமுகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று விஜய் திட்டவட்டமாக கூறியுள்ளார். திமுக மற்றும் பாஜக மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளதாக கடுமையாக விமர்சித்ததோடு திமுகவுக்கு அளிக்கும் வாக்குகள் பாஜகவுக்கு ஓட்டு போடுவதற்கு சமம் எனவும் தெரிவித்தார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுகவுடன் TVK கூட்டணி அமைக்கலாம் என கூறப்பட்ட நிலையில் தற்போது விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
