காலை 8.30 மணிக்கு தலைவர் விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், 7 மணி நேரம் தாமதமாக வந்த விஜய் 3 மணிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் நடுவில் பேசினார். அப்போது நாமக்கல்லில் விஜய்யின் பிரசார கூட்டத்தில் மொத்தம் 15 பேர் மயக்கமடைந்துள்ளார்கள். அதில், 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கடும் வெயில் மற்றும் கூட்ட நெரிசலால் மயக்கம் என தகவல் வெளியாகியுள்ளது.
