தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதுவரை இரண்டு கட்டங்களாக தேர்தல் பிரச்சாரம் நடந்து முடிந்துள்ள நிலையில் மூன்றாவது கட்டமாக இன்று நாமக்கல் மற்றும் கரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது நாமக்கல்லில் தேர்தல் பரப்புரையாற்றி வரும் விஜய், கொள்கை என்ற பெயரில் தமிழகத்தை கொள்ளை அடிக்கும் திமுகவுடன் தான் வரும் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும். மோசமான ஆட்சி நடத்தும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? என தொண்டர்களை நோக்கி விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். வரும் தேர்தலில் ஒரு கை பார்த்து விடலாம் என சவால் விடுத்த விஜய்.
