35 கோடிக்கு கைமாறிய விஜய்யின் சொத்து… கோடிகளை குவிக்கும் தளபதி… சினிமாவைத் தாண்டி அரசியலுக்காக நடக்கும் ‘மெகா’ பிளான்…!

Spread the love

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய், அண்ணா நகரில் உள்ள தனது சொகுசு பங்களாவை விற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தற்போது கோலிவுட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ரூ.35 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த சொத்து, அவர் ஆரம்ப காலங்களில் வாங்கிய முக்கியமான சொத்துகளில் ஒன்றாகும். பல ஆண்டுகளாக இந்த இடத்தை விற்க பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், தற்போது இந்த ஒப்பந்தம் இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திடீர் விற்பனைக்கு பின்னால் விஜய்யின் அரசியல் வருகையே முக்கிய காரணமாக இருக்குமென அரசியல் மற்றும் சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர். தனது ‘தமிழக வெற்றி கழகம்’ (TVK) கட்சியின் வளர்ச்சி மற்றும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களுக்கான நிதி திரட்டும் நோக்கில் அவர் தனது சொத்துக்களை பணமாக மாற்றத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அரசியலில் முழுவீச்சில் இறங்குவதற்கு முன், பொருளாதார ரீதியாக தன்னை வலுப்படுத்திக் கொள்ளவே இத்தகைய முடிவுகளை அவர் எடுத்து வருவதாகத் தெரிகிறது.

மற்றொரு புறம், இந்த சொத்து விற்பனைக்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான காரணங்களும் இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. விஜய்யின் குடும்ப வாழ்க்கையில் நிலவி வரும் சில சலசலப்புகள் மற்றும் சொத்து பங்கீடுகள் காரணமாகவே அண்ணா நகர் வீடு கைமாறியிருக்கலாம் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இருப்பினும், இது குறித்து விஜய் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய் தனது கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ (Jana Nayagan) வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் தணிக்கை குழுவின் கெடுபிடிகளால் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. சினிமா மற்றும் அரசியல் என இரு முனைகளிலும் விஜய் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், இந்த சொத்து விற்பனை செய்தி அவரது எதிர்கால நகர்வுகளுக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

1 மணத்தியாலம் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

1 மணத்தியாலம் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

2 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

2 மணத்தியாலங்கள் ago