எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) NDA கூட்டணிக்குள் கொண்டு வர ஏற்கனவே மறைமுக முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கமாக இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தமிழருவி மணியன், விஜய்க்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற இலக்கை அடைய விஜய் NDA கூட்டணிக்கு வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். விஜய் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் பெரிய அளவில் பலன் இருக்காது என்பதை ஒரு தந்தை என்ற முறையில் அவருக்குத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு நிலவி வரும் இந்த கூட்டணி குறித்த விவாதங்கள், தமிழருவி மணியனின் இந்தப் பேச்சால் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
