4 கோடி தராமல் இழுத்தடிக்கும் பிரபல தயாரிப்பாளர்… ஆப்பு வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்…!!

By Soundarya on மார்கழி 21, 2025

Spread the love

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட 15 கோடி ரூபாய் சம்பளத்தில், 11 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், மீதமுள்ள 4 கோடி ரூபாயை தராமல் இழுத்தடிப்பதாகவும் சிவகார்த்திகேயன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தப் பாக்கித் தொகையை வழங்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனு, வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே பல்வேறு கடன் சிக்கல்களில் சிக்கியுள்ள ஞானவேல் ராஜா, அவற்றின் காரணமாகத் தனது ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிடுவதில் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகிறார்