காலையிலேயே அதிர்ச்சி..! கார் விபத்தில் சிக்கிய நடிகர் சிவகார்த்திகேயன்… என்னாச்சு அவருக்கு..?

By Soundarya on மார்கழி 21, 2025

Spread the love

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் சிக்னல் அருகே சிவகார்த்திகேயன் சென்ற கார், முன்னால் சென்ற மற்றொரு கார் மீது லேசாக மோதியது.  இந்த விபத்தில் சிவகார்த்திகேயன் உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கார்கள் மட்டும் லேசாகச் சேதமடைந்தன. விபத்தைத் தொடர்ந்து இரு கார் ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிவகார்த்திகேயன் காரில் இருந்து கீழே இறங்கி வந்து, சேதத்திற்கான தொகையைத் தான் தருவதாகக் கூறிச் சமாதானப்படுத்த முயன்றார்.

   

முன்னால் சென்ற காரை ஓட்டி வந்த பெண்மணி, தனது தரப்பில்தான் தவறு இருப்பதாகக் கூறி மன்னிப்பு கேட்டதால், இரு தரப்பும் சுமுகமாகப் பேசி அங்கிருந்து சென்றனர். மயிலாப்பூர் போக்குவரத்து போலீசார் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.