கிறிஸ்தவரான விஜய் முருகன் சன்னதி வரை சென்றது எப்படி..? “அந்த ஒரு விஷயம்” வெளியான பரபரப்பு தகவல்…!!

By Soundarya on சித்திரை 30, 2026

Spread the love

இந்து சமய அறநிலையத் துறையின் விதிகளின்படி, அதன் கீழ் இயங்கும் கோயில்களில் இந்து மதத்தைச் சேராதவர்கள் கொடி மரம் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். இருப்பினும், மாற்று மதத்தினர் இந்து மத வழிமுறைகளையும், கோயிலின் வழிபாட்டையும் முழுமனதுடன் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்து ஒரு படிவத்தில் கையொப்பமிட்டால் சன்னதி வரை செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நடைமுறையைப் பின்பற்றி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அத்தகைய படிவத்தில் முழு மனதுடன் கையொப்பமிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். நேற்றைய தினம் அவர் சன்னதி வரை சென்று முருகனைத் தரிசித்ததாக அக்கோயிலின் இணை ஆணையர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.