லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அறிமுகம் ஏற்பட்டது.
பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இருவருக்கும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து வாடகை தாய் மூலம் நயன்தாரா இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். நடிப்பு, குடும்ப வாழ்க்கை என அனைத்தையும் மேனேஜ் செய்கிறார் நயன்தாரா.
ஜவான் படத்தின் மூலம் நயன் ஹிந்தியில் அறிமுகம் ஆனார். அடுத்தடுத்து சில பாலிவுட் படங்களில் நடிக்கவும் தயாராகி வருவதாக தெரிகிறது. தற்போது தமிழிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து அழகு சாதன பொருட்கள், நாப்கின் என பல பிசினஸ் செய்து வருகிறார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது மகன்களின் லேட்டஸ்ட் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வேகமாக பரவி வருகிறது.