Categories: சினிமா

எது நடந்தாலும் அதை பண்ணிட்டு போயிட்டே இருப்போம்… திடீரென மனைவியோடு விக்னேஷ் சிவன் போட்ட பதிவு..!

Spread the love

இயக்குனர் விக்னேஷ் சிவன் சிவி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அடுத்ததாக 2012 ஆம் ஆண்டு சிம்பு வரலட்சுமி ஆகியோர் நடித்த போடா போடி என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அடுத்ததாக 2014 ஆம் ஆண்டு தனுஷின் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்தில் நடித்திருந்தார். 2015 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

இப்படம் விக்னேஷ் சிவனுக்கு திருப்புமுனையாகவும் அமைந்தது.தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் பாவ கதைகள் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அடுத்ததாக LIK என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.  இதற்கிடையில் நயன்தாராவை திருமணம் செய்ததன் மூலமாகவும் பிரபலமானார் விக்னேஷ் சிவன். பின்பு வாடகைத்தாய் முறையி குழந்தை பெற்றுக்கொண்டார்கள்.

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. அடுத்ததாக நயன்தாரா டாகுமெண்டரி வெளியானபோது விக்னேஷ் சிவன்-நயன்தாராவுக்கும் தனுஷுக்கும் இடையே பிரச்னை ஏற்பாட்டு அதுவும் நீதிமன்றம் வரை சென்றது. பின்பு வலைப்பேச்சு டீமை 3 குரங்குகள் என்று கூறி நயன்தாரா சர்ச்சையை கிளப்பினார். அடுத்ததாக புதுச்சேரியில் அரசு சார்பில் நடத்தப்படும் ஒரு ஹோட்டலை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாக சர்ச்சை எழுந்தது.

ஆனால் விக்னேஷ் சிவன் கேட்கவில்லை என்று புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் வீடியோ வெளியிட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார். இப்படி ஒவ்வொரு சர்ச்சையில் சிக்கி வரும் விக்னேஷ் சிவன் தற்போது பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் என்ன நடந்தாலும்…. சிரித்துக்கொண்டே நகர்ந்து கொண்டே இருங்கள்… சிரிச்சிட்டு போயிட்டே இருப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

Soundarya

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

2 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

3 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

3 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

3 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

3 மணத்தியாலங்கள் ago