இயக்குனர் விக்னேஷ் சிவன் சிவி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அடுத்ததாக 2012 ஆம் ஆண்டு சிம்பு வரலட்சுமி ஆகியோர் நடித்த போடா போடி என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அடுத்ததாக 2014 ஆம் ஆண்டு தனுஷின் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்தில் நடித்திருந்தார். 2015 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

இப்படம் விக்னேஷ் சிவனுக்கு திருப்புமுனையாகவும் அமைந்தது.தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் பாவ கதைகள் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அடுத்ததாக LIK என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் நயன்தாராவை திருமணம் செய்ததன் மூலமாகவும் பிரபலமானார் விக்னேஷ் சிவன். பின்பு வாடகைத்தாய் முறையி குழந்தை பெற்றுக்கொண்டார்கள்.

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. அடுத்ததாக நயன்தாரா டாகுமெண்டரி வெளியானபோது விக்னேஷ் சிவன்-நயன்தாராவுக்கும் தனுஷுக்கும் இடையே பிரச்னை ஏற்பாட்டு அதுவும் நீதிமன்றம் வரை சென்றது. பின்பு வலைப்பேச்சு டீமை 3 குரங்குகள் என்று கூறி நயன்தாரா சர்ச்சையை கிளப்பினார். அடுத்ததாக புதுச்சேரியில் அரசு சார்பில் நடத்தப்படும் ஒரு ஹோட்டலை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாக சர்ச்சை எழுந்தது.

ஆனால் விக்னேஷ் சிவன் கேட்கவில்லை என்று புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் வீடியோ வெளியிட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார். இப்படி ஒவ்வொரு சர்ச்சையில் சிக்கி வரும் விக்னேஷ் சிவன் தற்போது பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் என்ன நடந்தாலும்…. சிரித்துக்கொண்டே நகர்ந்து கொண்டே இருங்கள்… சிரிச்சிட்டு போயிட்டே இருப்போம் என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
