தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் எம்ஜிஆர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். இன்றைய இளம் தலைமுறை நடிகர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக இருந்தவர் எம்ஜிஆர்.

அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி தனக்கான தனிப்பாதையை வகுத்து அதன் வழி நடந்தவர் எம்ஜிஆர். குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர் பின்னர் நடிகராக உயர்ந்தார். எம்ஜிஆர் படங்கள் என்றாலே ஆக்சன் காட்சிகள் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் இருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர்.
எம்ஜிஆர் படங்கள் வெளிவந்தாலே ஹிட் தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார். அதனால் தன்னை ஆதாரத்த தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தியவர் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் நல்ல குணம் படைத்தவர் மட்டுமல்ல வாரி வழங்கும் வள்ளல் கருணை உள்ளம் கொண்டவர். தன்னை தேடிவந்தவருக்கு கை நிறைய அள்ளிக் கொடுப்பவர். அது மட்டும் இல்லாமல் தன்னை சார்ந்தவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கஷ்டங்களிலெல்லாம் ஓடோடி சென்று உதவி செய்பவர் எம்ஜிஆர்.
எம்ஜிஆரின் நெருங்கிய நண்பராக இருந்தவர் தான் NTR. எம்ஜிஆரிடம் அனுமதி பெற்றது தான் NTR அரசியல் கட்சியை ஆரம்பித்தார். தேர்தலில் களமிறங்குவதற்கு முன்பாக எம்ஜிஆர் இடம் ஆசிர்வாதம் வாங்குவதற்காக NTR வந்திருக்கிறார். அப்போது நள்ளிரவு. அந்த நேரத்தில் எம்ஜிஆர் 15 பேருடன் அறுசுவை உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். NTR க்கும் அவர் உடன் வந்தவர்களுக்கும் விருந்து உணவு பரிமாறி இருக்கிறார்.

அப்போது NTR எம் ஜி ஆர் இடம் இந்த நேரத்தில் உங்களுக்கு எப்படி இவ்வளவு சாப்பாடு தயார் செய்ய முடிந்தது என்று கேட்டிருக்கிறார். உடனே எம்ஜிஆர் இது என்னுடைய கொள்கை எல்லோருக்கும் வயிறார சாப்பிட சாப்பாடு போட வேண்டும் என்பதுதான் என்னுடைய மிகப்பெரிய விருப்பம் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்து ஆச்சரியம் அடைந்த NTR தெலுங்கு தேசம் கட்சி ஆரம்பித்து வெற்றி அடைந்த பின்பு முதல் கையெழுத்து போட்டது திருப்பதி கோவிலில் தினம் தோறும் அன்னதானம் என்ற திட்டத்தில் தான். அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்திருக்கிறார் எம் ஜி ஆர்.
