ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆன வித்யா பாலன்… ஆனால் அவரை தூக்கிவிட்டு வேறொரு நடிகை ஒப்பந்தம்… எந்த படம் தெரியுமா?

By vinoth on புரட்டாதி 25, 2024

Spread the love

தமிழில் இயக்குனர் சசி இயக்கிய ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதும் நம்பிக்கைக்குரிய இளம் நடிகராக உருவானார். அடுத்து அவர் நடிப்பில் உருவான ஏப்ரல் மாதத்தில் மற்றும் பார்த்திபன் கனவு ஆகிய திரைப்படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றன.

ஆனால் அதன் பிறகு தேர்வு செய்து நடித்த படங்கள் எல்லாமே அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தருவதில்லை.  அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வெற்றிக்காக காத்திருக்கிறார். இதற்கிடையில் அவர் தெலுங்கில் சில படங்களில் செகண்ட் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

   

அவர் நடித்த வெற்றிப் படங்களில் ஒன்று மனசெல்லாம். அவரின் தொடக்கக் காலத்தில் உருவான இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். சந்தோஷ் என்ற அறிமுக இயக்குனர் இயக்க, இந்த படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது.

   

vidhya balan

 

இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனது நடிகை வித்யா பாலன்தானாம். படத்துக்காக அவர் சில நாட்கள் ஷூட்டிங்கிலும் நடித்துள்ளார். ஆனால் அவரைப் பின்னர் தயாரிப்பு நிறுவனம் நீக்கிவிட்டு த்ரிஷாவை ஒப்பந்தம் செய்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அவர் நிறைய தமிழ் படங்களில் ஒப்பந்தம் ஆகி பின்னர் ராசியில்லாத நடிகை என நீக்கப்பட்டார்.

இதனால் ஏற்பட்ட விரக்தியால் தென்னிந்திய சினிமாவே வேண்டாம் என்று பாலிவுட் சென்று முன்னணி நடிகையானார். அவர் பிரபல நடிகையான பின்னர் தென்னிந்திய சினிமா வாய்ப்புகள் கிடைத்த போதும் அவர் நடிக்க மறுத்துவிட்டார். ஆனால் கடைசியாக அஜித்தோடு நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தபோதுதான் தமிழ் படத்தில் நடிக்க சம்மதித்து நடித்தார்.