பொதுவாகவே ஒருத்தர் எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிப்பு என்பது முக்கியமான ஒன்று. சுதந்திரமான மற்றும் கவலை இல்லாத எதிர்காலத்திற்கு ஒவ்வொருவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். அப்படி சேமிக்க விரும்புபவர்களுக்கு வங்கிகள் மற்றும் மஞ்சள் அலுவலகங்கள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அஞ்சல் துறை ஓய்வூதிய திட்டம், பெண்களுக்கான சேமிப்பு திட்டம் மற்றும் விபத்து காப்பீட்டு திட்டம் என்று பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. அதன்படி கிராமப்புற மக்கள் பயன் பெரும் விதமாக கிராம சுரக்ஷா யோஜனா என்ற திட்டம் ஒன்று செயல்பாட்டில் உள்ள நிலையில் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களில் இந்த திட்டம் பிரபலமானதாக உள்ளது.
கிராமப்புற மக்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த திட்டம் அஞ்சல் அலுவலகங்களில் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயல்படுகின்றது. இந்த திட்டத்தில் தினமும் 50 ரூபாய் முதலீடு செய்தால் மட்டும் போதுமானது. மாத டெபாசிட் தொகை 1500 ரூபாயாக இருக்கும். இதன் மூலமாக முயற்சியின் போது 35 லட்சம் தொகையை நீங்கள் பெற முடியும். இந்த திட்டத்தில் 19 முதல் 55 வயது வரை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். இதில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 10,000 ரூபாய், அதிகபட்சம் 10 லட்சம் ரூபாயாக உள்ளது.
மேலும் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் இந்த திட்டத்திற்கான பிரீமியத்தை நீங்கள் முதலீடு செய்ய முடியும். மாதந்தோறும் 1200 ரூபாய் இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் தினமும் 50 ரூபாய் சேமிக்க வேண்டும். முதிர்வு காலத்தில் இந்த திட்டம் மூலம் 35 லட்சம் ரூபாய் வரை நீங்கள் திரும்ப பெறலாம்.
ஒவ்வொரு மாதமும் 1515 ரூபாய் 55 ஆண்டுகளுக்கும், 58 வருடங்களுக்கு 1,463 ரூபாய் ஒவ்வொரு மாதமும் மற்றும் 1411 ரூபாய் 60 ஆண்டுகளுக்கு ஒருவர் இந்த திட்டத்தில் பிரீமியம் செலுத்த வேண்டும். மேலும் இந்த திட்டத்தில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை கடன் பெறும் வசதியும் உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் போனஸ் தொகையும் உங்களுக்கு நீங்கள் சேமிக்க வேண்டும் என்று விரும்பினால் உடனே இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறுங்கள்.