தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் தான் நடிகர் எம் ஜி ஆர். நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல தடைகளை கடந்து நாயகனாக மாறியவர். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தார். யார் தயாரிப்பாளராக இருந்தாலும் இந்த படம் தொடர்பான முடிவை தானே எடுக்கும் வல்லமையுடன் வளம் வந்தவர் எம்ஜிஆர். அதுமட்டுமல்லாமல் பல நடிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்துள்ளார். தமிழ் சினிமா வரலாற்றிலேயே இப்படி ஒரு திரைப்படத்தை யாரும் பார்த்திருக்க முடியாது. அது மக்கள் திலகம் எம்ஜிஆரின் திரைப்படம் தான்.
1958 ஆம் ஆண்டு வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமான இந்த திரைப்படம் தான் நாடோடி மன்னன். இந்த படத்தில் எம்ஜிஆர் உடன் சரோஜாதேவி நடித்தார். இப்படம் குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது நாடோடி மன்னன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது எம்ஜிஆருக்கு பதிவு தபால் ஒன்று வந்துள்ளது. அதனை கையெழுத்திட்டு எம்ஜிஆர் வாங்கி பார்த்த போது அதில் வெற்று கடிதம் ஒன்று மட்டுமே இருந்துள்ளது. பிறகு அதை கண்டுகொள்ளாமல் நாடோடி மன்னன் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.
இந்த திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் பதிவு தபால் வந்த நபரிடம் இருந்து மற்றொரு தபால் எம்ஜிஆருக்கு வந்துள்ளது. அதில், நாடோடி மன்னன் திரைப்படத்தின் கதை என்னுடையது, நான் உங்களுக்கு பதிவு தபால் மூலம் கதையை அனுப்பி இருந்தேன், படத்தில் என்னுடைய பெயர் இடம் பெறவே இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த எம்ஜிஆர் இப்படி கூடவா ஏமாற்றுவாங்க என்று எண்ணி தன்னுடைய வழக்கறிஞர் மூலம் அந்த வழக்கை எதிர்கொண்டார்.அதன் பிறகு அவர் பதிவு தபால்கள் வாங்குவதில்லை.