மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவி ஏன் வாய் திறக்கல?… காரணம் இதுதானா?… வெளுத்து வாங்கிய ஜாய்…!

By Divyamayakannan on புரட்டாதி 7, 2025

Spread the love

தமிழ்நாடு, சமீப காலமாக பிரபல சமையல் கலைஞராக வளம் வந்து கொண்டு இருப்பவர் தான் மாதம்பட்டி ரங்கராஜன். இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார், அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தற்போதும் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா மீடியாவில் ஒரு பேட்டியளித்துள்ளார். தற்போதும் அந்த காணொளி சமூக ஊடகத்தில் தீயாய் பரவி வருகிறது. இவர் சமையல் கலைஞர் மட்டும் இல்லை மெஹந்தி சர்க்கஸ் படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். திரைப்படம் பெரிதும் வரவேற்பை கொடுக்கவில்லை. இதற்கிடையே சுத்தி என்பவரை திருமணம் செய்து இரண்டு மகன்களும் உள்ளனர்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக ரங்கராஜ் பங்கேற்று வருகிறார். முதல் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே இரண்டாவதாக திருமணம் செய்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைக்கு நடுவே சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முதல் மனைவியுடன் பங்கேற்று புகைப்படங்களும் வெளியாகிறது. இதனால் சமூக வலைத்தளத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. புதிதாக ஒரு குழப்பம், தற்போது இரண்டாவது மனைவி கர்ப்பமாக்கி கருக்கலைக்க என்னை கட்டாயப்படுத்தியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இதுவரை மாதம்பட்டி ரங்கராஜ் பதில் கூறாததால் இரண்டாவது மனைவி அவருடைய சமூக ஊடகப் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.