செங்கோட்டையன் எடுத்த திடீர் முடிவு… இபிஎஸ்-க்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி… அதிமுகவில் அடுத்த பரபரப்பு…!

By Srimathi on புரட்டாதி 7, 2025

Spread the love

அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும், அதற்கு 10 நாள் கெடு நிர்ணயித்திருக்கிறதாக கூறினார். அப்படி நடக்கவில்லை என்றால், இதே கோரிக்கைகளை வலியுறுத்துபவர்களை எல்லாம் ஒன்றிணைப்பேன்.

எடப்பாடி சாமியின், “மக்களை காப்போம்! தமிழகத்தை மீட்போம்!” என்ற பிரசார பயணத்தில் பங்கேற்க மாட்டேன், என்று கூறினார். இது அதிமுகவின் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில் திண்டுக்கல்லில் அதிமுக மூத்த தலைவர்களுடன், எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். இதனை தொடர்ந்து அதிமுக அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்க, எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

   

எடப்பாடியின் அதிரடி நடவடிக்கை பல்வேறு கட்சியினரும் அதிருப்தி தெரிவித்தனர். இந்நிலையில் செங்கோட்டையன் வரும் 9 ஆம் தேதி மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும், அப்பொழுது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும், தெரிவித்தார். கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கிய அவர்களை ஒருங்கிணைத்து, தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட செங்கோட்டையன் முடிவு செய்ததாக, தகவல் வெளியாகி வருகிறது.