அதிமுகவைத் தொடர்ந்து பாஜகவிலும் வெடித்த மோதல்… இரண்டாக உடைய போகும் அணி… செம அப்செட்டில் அண்ணாமலை..!

By Nanthini on புரட்டாதி 7, 2025

Spread the love

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்தது. இதனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் வாக்குவாதம் எழுந்த நிலையில் ஒரு கட்டத்தில் கட்சியிலிருந்து ஓபிஎஸ் முழுமையாக நீக்கப்பட்ட பொதுச் செயலாளர் பொறுப்பை இபிஎஸ் ஏற்று கொண்டார். இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகிய நிலையில் சமீபத்தில் 2026 தேர்தலுக்காக இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதன் வெளிப்பாடாக செங்கோட்டையன் பிரிந்து கிடக்கும் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என ஈபிஎஸ்-க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். ஆனால் திடீரென ஆலோசனை நடத்தி செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்குவதாக இபிஎஸ் நேற்று அறிவித்தார். இது கட்சியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதனிடையே அதிமுகவைத் தொடர்ந்து தற்போது பாஜகவிலும் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. அதாவது பாஜக மற்றும் அதன் கூட்டணியை நயினார் நாகேந்திரனை விட அண்ணாமலை தான் சிறப்பாக வழி நடத்தினார் என்ற பேச்சுகள் எழுந்ததால் இருவருக்கும் இடையே பணிப்போர் நிலவுவதாக பேசப்படுகிறது. இதனால் கடுப்பான நயினார் நாகேந்திரன், சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என்பதில் தீர்க்கமாக உள்ளாராம். இதனை அறிந்த அண்ணாமலை தரப்பு மேலும் சூடாகி டெல்லி தலைமையிடம் ரிப்போர்ட் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாஜகவின் தற்போது புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.