திமுகவுக்கு எதிராக பாஜக போட்ட மாஸ்டர் பிளான்… தமிழகத்தை அலறவிடும் பிரம்மாண்ட மாநாடு… நயினார் நாகேந்திரன் அறிவிப்பு…!

By Nanthini on புரட்டாதி 7, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முறமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக இந்த முறை தமிழகத்தில் கட்டாயம் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2026 தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் நான்கு பிரம்மாண்ட மாநாடுகளை நடத்த தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை, மதுரை, கோவை, தஞ்சை ஆகிய நான்கு இடங்களில் பாஜக மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்து வருவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த மாநாடுகளில் பிரதமர் மோடி பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பாஜக மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். திமுகவுக்கு எதிராக பாஜக செயல்பட்டு வருவது தற்போது புதிய புயலைக் கிளப்பியுள்ளது.