பிரபல நடிகரான விஜய் வெங்கட் பிரபு இயக்கம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு மீனாட்சி சவுத்ரி ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் பிரசாந்த் பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர். தற்போது கேரளாவில் கோட் படத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த விஜயை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர். உடனே விஜய் தன்னை சுற்றி இருந்த கேரளா ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி அசத்தினார். இதே போல ஒரு குட்டி குழந்தை விஜய்க்கு முத்தம் கொடுத்தார்.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. நடிகர் விஜய் தனது 69 ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் இறங்கப் போவதாக ஏற்கனவே அறிவித்தார். தமிழக வெற்றிக்கழகம் என்ற தனது கட்சி பெயரையும் அறிவித்து ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.
விஜயின் அரசியல் பிரவேசம் ரசிகர்களுடைய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளி இளைஞருடன் விஜய் கைகுலுக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
View this post on Instagram