தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தில் ஆரம்பித்த இவரது திரைப்பயணம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து பிரபல இயக்குனராக மாறினார். குறிப்பாக ஹாலிவுட் பாணியில் சினிமா யுனிவர்சஸை தொடங்கி விட்டார்.

Lokesh kanagaraj
அதாவது ஒரே காலத்தில் நடக்கும் வெவேறு படங்கள். போதை பொருளை மையமாக வைத்து கைதி, விக்ரம், லியோ என கார்த்தி, கமல், விஜய், சூர்யா போன்ற பெரிய நடிகர்களை ஒரே யுனிவர்ஸில் கொண்டு வந்தார். லோகேஷை இளைஞர்களுக்கு ரொம்ப பிடிக்கும், காரணம் அவர் படத்தில் ரொமான்ஸ் என்பதே கிடையாது, முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இயக்குவார்.

Lokesh kanagaraj and shruti haasan in inemal teaser

Lokesh kanagaraj and shruti haasan in inemal teaser
ஏன் காதல் காட்சிகள் உங்கள் படத்தில் இல்லை என கேட்டால் எனக்கு அது வராது என கூறுவார். அப்படிப்பட்ட லோகேஷ் இப்போது ஸ்ருதிஹாசன் இசையமைத்து, கமல் தயாரித்து எழுதியிருக்கும் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதற்கான ப்ரோமோ நேற்று வெளியானது. அதில் ஸ்ருதிஹாசனுடன் சூடான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருக்கிறார் லோகேஷ். இதனைப் பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.
Unga padathula romance panna thalayai vettittu.. what is this ma @Dir_Lokesh !? 💀💀 https://t.co/3VZOH4SEnk
— Gayathrie (@SGayathrie) March 21, 2024
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ரொமான்ஸ் செய்வதை பார்த்த நடிகை காயத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்கள் படத்தில் ரொமான்ஸ் செய்தால் தலையை வெட்டிட்டு.. இது என்னமா?” என்று கேள்வி எழுப்பி லோகேஷை Tag கலாய்த்திருக்கிறார். அதாவது விக்ரம் படத்தில் ஃபகத் பாசிலுக்கும் காயத்ரிக்கும் சில ரொமான்ஸ் காட்சிகள் இருக்கும். ஆனால் படத்தின் கதைப்படி காயத்ரியின் தலை வெட்டப்பட்டுவிடும். அதைத்தான் அவர் இப்படி காமெடியாக குறிப்பிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜின் படங்களில் ரொமான்ஸ் காட்சிகளே பெரும்பாலும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக வெளியான லியோ திரைப்படத்தில்தான் ஹீரோயின் சாகாமல் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.