தற்போது தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி ஷோக்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் “நீயா நானா” நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையுமே கவர்ந்து வருகிறது. இதேபோல மற்றொரு தொலைக்காட்சியிலும் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பை கொண்டு வார வாரம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு விவாதம்மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் முறைப்பெண்- முறை பையன் மணவாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்களும், சுவாரசியமும் என்ற தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. இதில் பெண் ஒருவர் தான் காதலித்த முறை பையனை திருமணம் செய்ய முடியாத நிலையில் வேறொருவரை திருமணம் செய்து கொள்ள தயாராகிறார். ஆனால் ஒரே நாளில் நடந்த மாற்றம் இவர்களுடைய திருமணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இவ்வாறு தன்னுடைய முறைப்பெண்ணையும் முறை பையனையும் எப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பதை அழகாக கூறியிருக்கிறார்.
